Monday, April 15, 2013

அரவனைப்பு


 தாயின் கதகதப்பில்
குழந்தை உணர்கிறது
உயிரின் பாதுகாப்பை !

Tuesday, July 5, 2011

சிதறி போன சிட்டுகுருவி கூட்டம்






கால மாற்றம் உறவுகளின் தொடர்பு
காகிதம் மாறி கணினி வழி நடை போடுகிறது ..
கால்நடையாக செல்லும் தூரம் தான்
கார் பயணம் தேவைபடுகிறது !!
வெயிலோடு உறவாடிய தோல்கள் எல்லாம்
குளிர்சாதன அறையில் பாடுபட தொடங்கியதால் ..
விளைநிலம் வீடுகளாயின
வயல்வெளிகள் சிறு தோப்புகளாக மாறின ..
சிதறி போனது என்னவோ
சிறு இதயம் கொண்ட சிட்டு குருவி கூட்டம் !

Saturday, March 14, 2009

உன்னோடு வாழ்கிறேன்


எனக்குள் வந்த உன்னை
என்ன செய்வது சொல் கண்ணே!
உறக்கம் கூட உன் நினைவுகளுடன் தான்
உன் வார்த்தைகள் தாலாட்டாய் வருகிறது!
கனவு என்ற ஒன்று வருவதில்லை
கண்ணெதிரே நீ இருக்கின்றாய் !
பகல் பொழுது முழுவதும் உன் ஞாபகம் தான்
பார்க்கும் பொருளெல்லாம் உன்னை
பக்கத்தில் வைத்து காட்டுகிறது !
செல்லும் இடமெல்லாம் உன்னோடு
செல்வது போல் உள்ளது...
யார் யாரோடு பேசுகிறேன்- அவை
உன்னோடு பேசுவது போல் உள்ளது...
மறக்க நினைக்க முடியவில்லை-உன்னை
மறந்து விட்டு எங்கு போவேன்...கண்ணே ..

Thursday, April 3, 2008

பென்சில்







காகிதம் கரைந்து போனாலும்..
உனது கூர்மை மழுங்கி போனாலும்..
எனது வார்த்தையை
வலிமையாக காண்பிக்கும்
தோழன் நீ........

Sunday, March 2, 2008

வெண்ணிலவே

இருட்டிவிட்டது வானம்-
மறைத்து விட்டது சூரியன் !
வந்து விட்டது வெண்ணிலவு
வீதியில் விளையாட்டு பிள்ளைகள்!

வேடிக்கை காட்டும் வானம்
கூட்டம் கூட்டமாக இருந்து
கூடி இருக்கும் கூட்டத்தில்
பிரகாசிக்கும் நட்சத்திரங்கள் !
நாட்டாமையாக வலம் வரும் நிலவு ...

நித்திரை வரும் நேரம் போல-
வீட்டில் விளக்குகள் அணைந்தன !
நான் மட்டும் உன்னோடு
கதை பேசி கொண்டு இருந்தேன் வெகு நேரம்..........

Tuesday, January 29, 2008

நினைவுகள்


நினைத்த நெஞ்சும்
தேடிய கண்களும்
பழகிய நாட்களும்
பேசிய வார்த்தைகளும்
உன்னை மறக்க நினைத்தாலும்
முடியாமல் - தவிக்க செய்கின்றன

காலம்



பகலவன் தோன்றிட
பனித்துளி போய்விட !
வெண்மை வந்திட
கருமை சென்றிட !
விழிகள் திறந்திட
கனவுகள் மறைந்திட !
தினசரி வேலையை
தொடங்கும் மனிதா !
சோர்த்து போகும் போது
சேர்க்கை தேவைப்படுகிறது !
மறந்து போக வேண்டிய தோல்வியை
மனதில் புதைத்து........
சுவாசம் போகும் வரை
சுகத்தையே நாடும் வாழ்வு - ஆனாலும்
நிலவு உலாவ...
நட்சத்திரம் மின்மினுக்க...
நாட்கள் செல்கிறது !!!!!!!!!!!